BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மக்கள் விரோதப் போக்கினை கடைபிடித்தால் பாஜக தலைவர் அண்ணாமலை ஆக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் மோடி ஆக இருந்தாலும் எதிர்ப்பை சந்தித்தே ஆகவேண்டும் என கோவில்பட்டியில் துரை வைகோ பேட்டி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்துரையாடினார். நிகழ்ச்சிக்கு, நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவர் கோபால்சாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க சாத்தூர் கிளை சங்கத் தலைவர் லட்சுமணன், நிர்வாகிகள் பெருமாள்சாமி, ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தீப்பெட்டி உற்பத்தியாளர்களிடையே கலந்துரையாடினார். தீப்பெட்டி தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, தீப்பெட்டி தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன், என்றார்.

நிகழ்ச்சியில், நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன், விவசாய அணி மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் ராஜவேல், செயலாளர் கதிரவன், நிர்வாகிகள் ஜோசப் ரத்தினம், ஜார்ஜ், ரத்தினகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆளுநர் பயணத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பாரபட்சமில்லாமல் தமிழக காவல்துறையினர் செய்திருந்தனர்.

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இச்செயல் தமிழக மக்களுக்கான விரோதப் போக்கினை ஆளுநர் கையாளுகிறார் ஆளுநர் தமிழக ஆளுநராக செயல்பட வேண்டும் பாஜக ஆளுநராக செயல்படக்கூடாது அதுதான் மதிமுகவின் கருத்து.

மக்களுடைய எதிர்ப்பு கொந்தளிப்பின் வெளிப்பாடுதான் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.

கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வில்லையே தவிர வன்முறை கூடாது.

ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட பட்ட விவகாரம் தமிழக மக்களின் பிரதிபலிப்பாகவே நான் பார்க்கிறேன்.

மக்கள் விரோதப் போக்கினை கடைபிடித்தால் பாஜக தலைவர் அண்ணாமலை ஆக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் மோடி ஆக இருந்தாலும் எதிர்ப்பை சந்தித்தே ஆகவேண்டும்.

திராவிடம் என்பது சமத்துவம் சமூக நீதி என்ற வாழ்வியல் முறை தான் திராவிடம் அண்ணாமலை நானும் ஒரு திராவிடன் என்று கூறியது எங்களுக்கு கிடைத்த வெற்றி.

கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு அது தரைகுறைவாக கொச்சைப்படுத்திய தாகும் வரம்பு மீறிய இருக்கக்கூடாது பாக்யராஜ் கூறிய கருத்தை நான் அவ்வாறு தான் பார்க்கிறேன்.

தீப்பெட்டி தொழிற்சாலை மாற்று தொழிலுக்கு வர முடியாது வரக்கூடாது என்று நான் நினைக்கிறேன் பட்டாசு தொழில் எவ்வாறு அதேபோல்தான் தீப்பெட்டி தொழிலும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைக்கு திமுக தலைமையிலான தமிழக அரசு விரைவில் மாற்றத்தை கொண்டுவரும்.

கோடை காலங்களில் மின் தேவை என்பது அதிகமாக தேவைப்படுகிறது அது காலங்காலமாக நடைபெற்றுவரும் செயல் அதில் சவாலான பிரச்சினைகளும் உள்ளது நேற்று அமைச்சர் இது சம்பந்தமாக கூறிய விளக்கம் அளித்துள்ளார் அதன் காரணமாக கூட இருக்கலாம்.

வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் மின் தட்டுப்பாடு வராது என்பதுதான் என் நிலைப்பாடு அதற்கான உற்பத்தியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது எனவே மின் தட்டுப்பாடு வராது என்பது தான் என்னுடைய கருத்து.

கோவில்பட்டி தனி மாவட்டமாக உருவாக வேண்டும் என்பதுதான் மதிமுகவின் நிலைப்பாடு என்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தங்கள் பிரச்சினை குறித்து எடுத்துரைக்க என்னை சந்திக்க வந்துள்ளனர்.

தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து நேரடியாக சந்தித்து அவர்கள் பிரச்சினை குறித்து தெரிந்து கொள்வது என்பது எனக்கு விருப்பம் தான் ஆனால் அதற்கான தளம் அமைய வேண்டும் அவர்களுக்கும் தங்களது பிரச்சினை குறித்து தெரிய வாய்ப்பு அளிக்கும் போது தான் இது நடைமுறை சாத்தியமாகும் தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பு இல்லை போராட்டக் களத்தில் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து அவர்களிடம் விவாதித்து உள்ளேன் என்றார் அவர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )