மாவட்ட செய்திகள்
ஆம்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியரை தாக்க முயற்சித்த மாணவனை மற்றும் விடியோ பதிவு செய்த மாணவன் உட்பட மூன்று மாணவர்கள் தற்காலிகமாக பள்ளிக்கு வர அனுமதி மறுத்து உத்தரவு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி சட்டையை கழட்டி ரவுடிசம் போல் நடந்து கொண்டு தாக்க முயற்சி செய்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் ஆம்பூர் வட்டாட்சியர் பழனி ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் வேலன் தலைமையிலான குழுவினர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த சர்ச்சைக்குரிய வீடியோவில் இருப்பது பன்னிரண்டாம் வகுப்பு ஏ பிரிவில் பயிலும் மாணவர் மாரி என்பதும் அந்த மாணவர் பள்ளி வகுப்பறையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேசை மீது படுத்து இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது வகுப்பறைக்குள் நுழைந்த தாவரவியல் ஆசிரியர் சஞ்சய்காந்தி என்பவர் மாணவர்களிடம் ரெக்கார்ட் நோட்டுகளை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார். இதனை கண்டுகொள்ளாமல் மேஜை மீது படுத்திருந்த மாணவனை ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த மாணவர் மாரி ஆசிரியர் சஞ்சய்காந்தியை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்க முயற்சி செய்துள்ளார்.
இதனை அதே வகுப்பில் பயிலும் மாணவர் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மாணவன் மாரி மீது இடைநீக்கம் உட்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலும் பள்ளி வளாகத்திற்குள் செல்போன் உபயோகம் செய்த மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில் ஆசிரியரை தாக்க முயற்சித்த மாணவன் மாரி மற்றும் செல்போனில் வீடியோ எடுத்த செல்வக்குமார், யோணோ (Yeno) உட்பட மூன்று மாணவர்களும் தங்களது பெற்றோரை அழைத்து வந்து வரும் திங்கட்கிழமை 25-04-2022 அன்று காலை 12 மணிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை ஆசிரியரின் தலைமையில் நடைபெறும் விசாரணையில் பங்கேற்று விளக்கம் அளிக்கும் வரை மூன்று மாணவர்களும் பள்ளிக்கு வர அனுமதி மறுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலன் அறிக்கை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆம்பூர் அருகே ஆசிரியரை மாணவன் ஒருவர் சட்டையை கழட்டி ரவுடிசம் போல் நடந்து தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியரை தடுக்க முயன்ற மாணவன் உட்பட மூன்று மாணவர்களை நான்கு நாட்கள் பள்ளிக்கு வர அனுமதி மறுத்து தலைமை ஆசிரியர் அறிக்கை வெளியிட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.