மாவட்ட செய்திகள்
ஆத்தூர் அரசு தலைமை மருத்துவ மனையில் முதல் முறையாக தைராய்டு அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவக் குழுவினர் சாதனை,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆத்தூர் மட்டுமின்றி கெங்கவல்லி, பச்சமலை, கருமந்துறை, தம்மம்பட்டி, வீரகனூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிசிச்சைப் பெற்று வருகின்றன, இந்நிலையில் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மனைவி தேன்மொழி இவர் கடந்த ஒரு வருடமாக கழுத்தில் தைராய்டு கட்டியின் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக தைராய்டு அருவைச் சிகிச்சை டாக்டர் கோபிநாத் தலைமையிலான விஜயலட்சுமி, சுகுமார், மற்றும் மயக்கவியல் நிபுணர் பூந்தமிழ் ஆகியோரின் மருத்துவக்குழுவினர்கள் தைராய்டு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனைப்படைத்தனர், இந்த தைராய்டு அறுவை சிகிச்சை மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை செய்து வந்த நிலையில் முதன் முறையாக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தனர்
பின்னர் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் நோயாளிகள் நலமுடன் உள்ளனர், தொடந்து மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அழகேசன் (60) இவரும் கடந்த ஒன்றரை வருடமாக குடலிறக்கமும், இடதுபுரம் புற்றுநோயும், வலதுபுறம் விறைவாதம் ஆகிய மூன்றுநோய் தொந்தரவுடன் அவதிப்பட்டு வந்த அவருக்கும் ஒரே நேரத்தில் மூன்று அறுவைச்சிகிச்சையை டாக்டர் கோபிநாத் அவர்கள் வெற்றிகரமாக செய்து சாதனைப் படைத்துள்ளார் மேலும் நோயாளி குணமடைந்து நன்றாக உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் மக்கள் தைராய்டு மற்றும் எந்தவிதமான அறுவைச் சிகிச்சைகளையும் அத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் செய்து கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
