மாவட்ட செய்திகள்
நாட்டுப்புற கலை பாதுகாக்க வலியுறுத்தி தஞ்சையில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் ரம்யா சத்தியநாதன் பள்ளி மற்றும் தஞ்சை தடகள கழகம் இணைந்து “நாட்டுப்புற கலைகளை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டி மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. இந்த போட்டியினை தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார். இப்போட்டி ஆண்களுக்கு 12 கிலோமீட்டர், பள்ளி மாணவர்களுக்கு 8 கிலோமீட்டர், மாணவிகளுக்கு 6 கிலோமீட்டர் என்ற பிரிவில் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 7 ஆயிரம் ரூபாய்! மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய், 4 வது பரிசாக 10 நபர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்பட்டது. இதில் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தஞ்சை தடகள சங்க தலைவருமான கிருஷ்ணசாமி வாண்டையார், பள்ளி தாளாளர் சத்திய நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியினை முன்னிட்டு கோலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகஞர்களிர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.