BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொலை வழக்கில் சிக்கி, கைதான வழக்கில், 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் கொரடாச்சேரியில் அண்ணன், தம்பியை கொலை செய்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், முன்விரோதம் காரணமாக கொலை செய்த தந்தை, 2 மகன்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

கொரடாச்சேரி பி.எம்.ஹெச் காலனியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன். இவர் திருவாரூர் மாவட்டம் ஆர்ப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 22 வயதில் மதன் என்ற மகனும், 19 வயதான ராஜா என்ற மகன் இருந்தனர். இவர்கள் இருவரும் பைக் ஒன்றை இரவல் வாங்கி ஓட்டியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 2013ம் ஆண்டு அதே காலனியில் வசித்து வந்தவருக்குள் பாட்ஷா (58) மற்றும் அவரது மகன்கள் மன்சூர் அலிகான் (32), மர்ஜித் அலிகான் (31) மற்றும் ருக்கன்பாட்ஷாவின் உறவினர் ஹாஜி முகமது (43) ஆகியோர் சகோதரர்கள் மதன், ஸ்ரீதர்ராஜாவை கொலை செய்தனர்.வழக்குப்பதிவு செய்த கொரடாச்சேரி போலீசார் ருக்குன் பாட்ஷா உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, பின்னர் ஜாமீனில் வெளியேவிட்டனர். சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சாந்தி தனது தீர்ப்பை அளித்தார். அதில், குற்றவாளி மன்சூர் அலிகானுக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ருக்குன் பாட்ஷா, மர்ஜித் அலிகான், ஹாஜி முகமது ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இரட்டைக் கொலை நடந்து 9 ஆண்டுகள் ஆன நிலையில் குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )