BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வரத்து குறைவால் உடுமலைப்பகுதியில் தக்காளி விலை உயர்வு.

உடுமலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்தது இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை மடத்துக்குளம் அமராவதி இதில் சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது இங்குள்ள விவசாயிகள் சுழற்சி சி முறையில் கீரைகள் காய்கறிகளை யும் நீர் இருப்புக்கு ஏற்றவாறு ஆண்டுப் பயிர்களையும் நீண்ட காலப் பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் விவசாயிகளுக்குக் கைகொடுத்து உதவுகிறது.
இதனால் சாகுபடி பணியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது நீராதாரங்களில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வளர்ந்து விவசாயிகளுக்கு விளைச்சல் அளித்து வருகிறது இந்த சூழலில் கடந்த சில நாட்களாக உடுமலை சுற்றுப்பகுதியில் வெப்பச் சலனத்தின் காரணமாக சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.


மழையின் காரணமாக விளைநிலங்கள் ஈரப்பதம் ஆகியுள்ளது மேலும் நீர் ஆதாரங்களும் கணிசமான அளவில் நீர் வசதி பெற்று வருகிறது அந்த வகையில் பலத்த மழையின் காரணமாக உடுமலையில் தக்காளிப் பழங்கள் வரத்து குறைந்து விட்டது .இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீண்ட காலப் பயிர்களை காட்டிலும் குறைந்த செலவில் அந்த வருமானத்தை அளிக்கக்கூடிய காய்கறிகளும் சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன விவசாயிகள் அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி சாகுபடி மேற்கொண்டனர் அது போதுமான அளவு தண்ணீர் இருந்தும் வெப்பத்தின் தாக்குதலால் செடிகள் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை இதனால் காய்ப்புத் திறனும் குறைவாக இருந்தது.


15 கிலோ கொண்ட பெட்டி ஒன்று அதிகபட்சமாக ரூபாய் 100 முதல் 150 வரை எல்லாமே விற்பனையானது இதனால் முதலீட்டு தொகையை கொடுத்து திரும்பப்பெற முடியாத சூழல் ஏற்பட்டது இந்த நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக கடந்த 10 நாட்களாக குறிப்பிட்ட இடைவெளியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தக்காளிப் பழங்கள் செடியிலே அழுகி வருகிறது இதன் காரணமாக 15 கிலோ கொண்ட பெட்டி 1 ரூபாய் 400 முதல் 450 வரையிலும் தற்போது விற்பனையாகி வருகிறது தக்காளிப் பழங்கள் அழுகியதன் காரணமாக காரணமாக பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்றாலும் முதலீட்டு தொகையை திரும்பப் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )