மாவட்ட செய்திகள்
பெருகி வரும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் திருப்பூர் தெற்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட 50 இடங்களில் மூன்றாம் கண் எனப்படும் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா.

பெருகி வரும் குற்றச் சம்பவங்களால் காவல்துறையினருக்கு ஏற்படும் மன உளைச்சலை குறைக்கவும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை துரிதமாக கண்டுபிடிப்பதற்காக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட 50 இடங்களில் மூன்றாம் கண் எனப்படும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது இதனை திருப்பூர் தெற்கு சரக துணை ஆணையர். ரவி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.


தொடர்ந்து அதி நவீன கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கு உதவி புரிந்த தொழிலதிபர்களுக்கு சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் கே.வி.ஆர். நகர் சரக உதவி ஆணையர். வரதராஜன், திருப்பூர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் உதவி ஆணையர்.செல்வம் தங்கம்,திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர்.பிச்சையா உள்ளிட்ட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
