மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்களை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்களை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே முத்தாண்டிப்பட்டியை சேர்ந்தவர் தாமஸ். இவரது மனைவி ரூபி ஸ்டெல்லா (40). இவர்களின் மகள் எஸ்தர். கடந்த 27ம் தேதி ரூபி ஸ்டெல்லாவும், எஸ்தரும் அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த துரைசாமி மகன் கபிரியேல் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த ரூபி ஸ்டெல்லா மற்றும் எஸ்தரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அவர்களை இருவரையும் இரும்பு ராடு மற்றும் கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தாய், மகள் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து பூதலூர் போலீஸ் ஸ்டேஷனில் ரூபி ஸ்டெல்லா புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
