BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருக்கடையூரில் வி கே சசிகலா சாமி தரிசனம் செல்பி எடுத்த பொதுமக்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு வி கே சசிகலா சாமி தரிசனம். திருக்கடையூர் ஆலயம் சார்பில் வாசலில் பூர்ணகும்ப மரியாதையுடன் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு, தருமபுர ஆதீன கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், ஆலய அர்ச்சகர் கணேச குருக்கள், தேவஸ்தான அலுவலர் ஸ்ரீராம் வரவேற்றனர்.

தொடர்ந்து கோ பூஜை, கஜ பூஜை செய்த பின்னர் கள்ள வாரண விநாயகர், அமிர்தகடேஸ்வரர் ஆலயம், காலசம்ஹாரமூர்த்தி சன்னதி ஆகியவற்றில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அபிராமி அம்மன் சன்னதியில் வி கே சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஆலயம் சார்பில் ஆலய பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. திருக்கடையூரில் சாமி தரிசனம் முடிந்து கிளம்பியவௌக்கு இரண்டு விரல்களால் இரட்டை இலை சின்னம் காட்டி வணக்கம் தெரிவித்த பெண்கள் பொதுமக்களுக்கு பதில் வணக்கம் தெரிவித்தார். ஏராளமான பொதுமக்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )