மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே வல்லத்தில் அனுமதியின்றி கிராவல் சாண்ட் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல்.

தஞ்சை அருகே வல்லத்தில் அனுமதியின்றி கிராவல் சாண்ட் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சை பகுதியில் அனுமதியின்றி கிராவல் சாண்ட் கடத்தப்படுவதாக வல்லம் புதூர் விஏஓ வள்ளி என்பவர் வல்லம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரியை போலீசார் மடக்கி நிறுத்தினர். போலீசாரை கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு அதில் வந்த 2 பேர் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார் அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி கிராவல் சாண்ட் கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து இதுகுறித்து வல்லம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர் வல்லம் புதூரை சேர்ந்த ராஜேந்திரனையும், லாரி டிரைவரையும் தேடி வருகிறார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
