மாவட்ட செய்திகள்
9ம் வகுப்பு மாணவி வயிற்றில் 6 மாத குழந்தை !

திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார் அவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார்.
உடனடியாக அவரது பெற்றோர்கள் சிறுமியை அழைத்து ராயபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளனர் அதில் அந்த மாணவி வயிற்றில் 6 மாத குழந்தை இருப்பதாக தெரியவந்தது உடனடியாக அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் திருவெற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த மின்வாரியத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் ராஜசேகரன் வயது 48 இவர் பல நாட்களாக இந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
ராஜசேகரனுக்கு ஒரு மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது உடனடியாக காவலர்கள் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
