BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மூதாட்டி உட்பட இருவரை தாக்கிய நபரை கைது செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் வண்ணாம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மற்றும் அவரது பாட்டி ஆகியோரிடம் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார் இதனைத்தொடர்ந்து சேகர் மற்றும் அவரது பாட்டி ஆகியோரை செந்தில்குமார் தாக்கியுள்ளார் இதனால் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் செந்தில்குமார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர் பின்னர் ஆப்பக்கூடல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )