மாவட்ட செய்திகள்
அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தேவர்மலை பகுதியை சேர்ந்த சிவராஜி இவரது மனைவி சிவம்மாள் இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார் இந்நிலையில் இவருக்கு நேற்று நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் வரும்வழியில் தாமரைக்கரை பர்கூர் வழியில் யானை சாலையை வழிமறித்து நின்றதால் சுமார் அரை மணி நேரம் ஆம்புலன்ஸ் அங்கேயே நின்றது இதனால் ஓடும் ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் சிவா கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார் அப்போது அழகான ஆண் குழந்தை பிறந்தது இதனைத் தொடர்ந்து தாயும் செய்யும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
