BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் செய்தித்துறை அமைச்சர் அறிவிப்பு.


மாயூரம் வேதநாயகம் பிள்ளை  ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1879-இல் எழுதிய பிரதாப முதலியார்சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார்.

இவரின் பெற்றோர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்குத் தொடர்வண்டியில் செல்கையில் குளத்தூர்  தொடர்வண்டி நிலையத்தில் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 11 அக்டோபர் 1826 பிறந்தார்.

1876-1878 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துகள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை எழுதினார்.

தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் ரூபாய்.3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் செய்தி மற்றும் விளம்பரம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )