BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கைலாசநாதர் நித்ய கல்யாண பெருமாள் தேவஸ்தானத்திற்கு அறங்காவல் பொறுப்பேற்பு.

காரைக்காலில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் நித்ய கல்யாண பெருமாள் தேவஸ்தானத்திற்கு அறங்காவல் வாரியம் அமைத்து புதுவை அரசு அரசாணை வெளியிடப்பட்டு காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H. நாஜீம் தலைமையில் புதன்கிழமை காலை பதவி ஏற்றுக்கொண்டனர்.

தலைவராக முன்னாள் முதல்வர் ராமசாமியின் மகன் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், துணை தலைவராக சிதம்பரம் பத்தர் மகன் புகழேந்தி, செயலாளராக கோவிந்தராஜ் பிள்ளை மகன் பாஸ்கரன், பொருளாளராக முன்னாள் பொதுப்பணித்துறை தலைமை சண்முகசுந்தரம், உறுப்பினராக நர்சிங் கல்லூரியின் முதல்வர் திருமதி. ஜெயபாரதி காரைக்கால் தெற்கு தொகுதி உறுப்பினர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.

பதவியேற்ற அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்து தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா உங்கள் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )