BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

களிமேடு விபத்தை, மகாமக விபத்தோடு ஒப்பிட்டு பேசினால், தவறாக முடியும் என தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டி.

 

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பேசக்கூடாது. விபத்து நடந்து விட்டது, அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று தான் கூற வேண்டுமே தவிர, இது தனியார் கோயில் என்று கூறக்கூடாது.

தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தான் இந்த கோயில் உள்ளது. சிலோனில் இல்லை எனவும் தெரிவித்தார். அரசாங்கம் பொறுப்பேற்று அந்த அந்த விபத்திற்கான காரணத்தைச் சரி செய்யவேண்டும். இது போல் தமிழகத்தில் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்தினை மகாமக விபத்தோடு ஒப்பிட்டு பேசி, அரசியல் ஆக்கினால் தவறாக முடியும் என அவர் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )