BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக வேலூரில் 106.3 டிகிரி வெப்பம் பதிவு!

Vellore recorded an all-time high of 106.3 degrees this year || இந்த  ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக வேலூரில் இன்று 106.3 டிகிரி வெப்பம் பதிவு

வேலூரில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 106.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் மதிய வேளைகளில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. எனினும், வெப்பச்சலனம் காரணமாக பிற்பகல் வேளைகளில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்து சற்று இதமான சூழலை உருவாக்குகிறது.

இந்த நிலையில், வேலூரில் நேற்று அதிகபட்சமாக 106.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டில் இதுவரையில் இல்லாத அளவாகும்

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )