BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்-மாவட்டம் கிராம பகுதியை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் கிராம திருவிழாக்களை முன்கூட்டியே நடத்த ஏற்பாடு.

திண்டுக்கல் மாவட்டம் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அடுத்த நான்காம் அலை ஏற்படுமோ என்ற கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு பல கிராமங்களில் முன்கூட்டியே கிராம திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். கடந்த 2020 மார்ச் 24இல் துவங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த இரு ஆண்டுகளாக நீடித்தன. இதற்கிடையில் தளர்வுகள் கிடைத்தாலும் முழுமையாக இயல்பு நிலை இல்லை. தற்போது இரு மாதங்களாகத்தான் கட்டுப்பாடுகள் முழுமையாக விடப்பட்ட நிலை உள்ளது .ஆனால் தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியதால் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக வரும் மாதங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ள நிலையில் இதனால் தற்போது கிடைத்துள்ள தளர்வு நிலையை பயன்படுத்தி பல கிராமங்களில் திருவிழாக்களை முன்கூட்டியே நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )