BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக திருச்சி ரயில்வே நிலையம் எதிரே உள்ள வழிவிடு முருகன் கோவில் முன்பு தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசும், மாநில அரசும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை உயர்த்திக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் இதர பொருட்கள் விலை ஏற்றி வருகிறது.


இதனை கட்டுக்குள் வைக்க வைக்கும் வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குணசேகரன், சின்னதுரை. அலெக்சாண்டர், ராஜீவ்காந்தி, முகமது கனி , சின்னச்சாமி உட்பட 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )