BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சிலம்பப் போட்டிக்கு இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி 2 மணிநேரம் தொடர் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.

தற்காப்புக் கலையாக சிலம்பம் உள்ளது இக்கலையை ஆர்வத்துடன் பள்ளி மாணவர்கள் தற்போது கற்று வருகின்றனர் இதனையடுத்து தமிழக அரசு சிலம்ப விளையாட்டு போட்டிக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கியது.

இந்நிலையில் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ஸ்டார் குளோபல் ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நோபல் உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தியது இதில் 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இரண்டு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை முயற்சியை மேற்கொண்டனர் .

மேலும் தற்காப்பு கலையான வாள்வீச்சு மற்றும் யோகா குட்டிக்கரணம் அடித்தல் உள்ளிட்டவர்களையும் மாணவர்கள் செய்து காட்டினர், சிலம்ப சாதனை போட்டியில் ஈடுபட்ட மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் உற்சாகப்படுத்தினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )