BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம் 1988 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை படித்த படிக்கும் மாணவர்கள் ஒரே நேரத்தில் சந்தித்து ஆரத் தழுவிக் கொண்ட நிகழ்வு நடைபெற்றது.

தஞ்சாவூர் பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள புஷ்பம் கல்லூரி 66 ஆண்டுகளாக கல்விப் பணியை செய்து வருகிறது இக்கல்லூரியில் உடற்கல்வி துறை 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அந்த ஆண்டிலிருந்து தற்போது வரை இத்துறையில் படித்த படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் முதல் கடந்த ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் வரையிலும் தற்போது படிக்கும் மாணவர்கள் என சுமார் 600 பேர் பங்கேற்றனர்.

உடற்கல்வி துறையில் கடந்த 30 ஆண்டுகளில் படித்து பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில், கல்லூரி முதல்வர்களாக, பேராசிரியர்களாக, காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, வருவாய் துறை, போக்குவரத்துத் துறையில் அதிகாரிகளாக உள்ள பலரும் தாங்கள் படித்த கல்லூரிக்கு வந்து தங்கள் மாணவப் பருவத்தை நினைவு கூர்ந்ததோடு நண்பர்களை சந்தித்து ஆரத்தழுவி மகிழ்ந்தனர் முன்னாள் பேராசிரியர்கள் அய்யாவு, ராபர்ட் அலெக்சாண்டர், ரவிக்குமார், ஜோசப் உள்ளிட்டோரும் வரவழைக்கப்பட்டு பழைய மாணவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

கல்லூரியின் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் கலந்துகொண்டு சிறப்பு வாழ்த்துரை வழங்கினார் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் படித்த பழைய மாணவர்கள் தங்கள் பேராசிரியர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டு நண்பர்களோடு உணவருந்தி நீங்கா நினைவுகளுடன் கலைந்து சென்றனர்

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )