BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற அம்மன் ஆலயங்களுள் ஒன்றான தஞ்சை ” புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்திற்கு தமிழக அரசு விரைவில் குடமுழுக்கு” நடத்திட வேண்டும்.

மே தினத்தையொட்டி புன்னைநல்லூரில் இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஒரே ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

300 க்கும் மேற்பட்ட புன்னைநல்லூர் கிராம மக்கள் பங்கேற்ற மே தின கிராமசபை கூட்டத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்திட வேண்டிய நிலையில்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நடத்தி 18 ஆண்டுகள் ஆகிவிட்டதால் தமிழக அரசு கோயிலை புனரமைத்து, குடமுழுக்கு நடத்திட ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என்கிற ஒரே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊராட்சி மன்ற நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )