BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் 22 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மலையாண்டிகவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கரும்ம்மாள் தலைமையில் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிக்குபட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது,

மழைநீர் சேகரிப்பு குறித்து பணிகள் மேற்கொள்வது , தனிநபர் இல்ல கழிப்பறைகள்
கட்டப்படுவது மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் தொடர்பாக பணிகளை விரிவு படுத்துதல் , வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பயனாளிகள் பட்டியலில் தேர்வு செய்தல் உட்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் பாலு உட்பட பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )