BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கொரோனோ காலக்கட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு நடத்தப்பட்ட குறள் ஓவியப்போட்டி – வழிகாட்டிய ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ்களை பெற்ற பள்ளி மாணவ – மாணவிகள்.

தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தமிழக இணைய கல்வி கழகம் இணைந்து கொரோனோ காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாத போது மாணவர்களுக்கு திருக்குறள் மற்றும் தமிழ்மொழி மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் குறள் ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

கொரோனோ காலக்கட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மீது அதிருப்தி வந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு இணையத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இணையத்தின் வாயிலாக நடத்தப்பட்ட இந்த குறளோவியம் போட்டியில் சுமார்
12ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டு ஒவ்வொரு குறளுக்கும் ஏற்றவாறு தங்களது ஓவியங்களை அனுப்பி வைத்தனர்.

இதில் திருச்சி மாவட்டத்தில் தேர்வான மாணவ – மாணவிகள்
இன்று தங்களது பள்ளி ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து சான்றிதழ், ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டு வாழ்த்து பெற்றனர்.

இந்த ஓவியப்போட்டி தங்களுக்கு ஆர்வத்தையும்,
உத்வேகத்தையும் ஏற்படுத்தியதாக கூறும் பள்ளி கல்லூரி மாணவர்கள் – தங்களது படைப்பு தமிழக அரசால் வெளியிடப்படும் திருக்குறள் காலேண்டரில் அச்சிடப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது என்பதை என்னும் போது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )