மாவட்ட செய்திகள்
போலி மது விற்பனை அமோகம்!

காட்பாடியில் அமோகமாக வியாபாரம் ஆகும் போலி மதுபான கடை (ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்) என்ற பாடலுக்கு ஏற்றார் போல் நடக்கும் அவல நிலை நீங்குமா?.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை கூட்டு சாலை உள்ளது .அங்கு தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகின்றது. இங்கு குடிமக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். இந்த நிலையில் தான் நேற்றுமுன்தினம் (1ம் தேதி) மே தினம் என்பதால் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை டாஸ்மாக் கடைகள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓட்டல்களில் கள்ளத்தனமாக மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் ஆகியோர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில்தான் காட்பாடி அடுத்த வள்ளிமலை கூட்டு சாலையில் நேற்றுமுன்தினம் மற்றும் இன்று காலை வரை டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் கேட்ட போது இங்கு நேற்றுமுன்தினம் மற்றும் பொதுமக்கள் இன்று மட்டும் அல்ல நாள்தோறும் இங்கு கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர்.
திரைப்படப் பாடலில் வருவது போல ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன் என்ற பாடலுக்கு ஏற்றவாறு டாஸ்மாக் கடை மூடினாலும் கூட அதற்கு அருகிலேயே டாஸ்மாக் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வது வேதனைக்குரிய ஒன்றாகும் .
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
