BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலை நெடுஞ்செழியன் காலனி மதுரை வீரன் பட்டத்தரசி பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் கோவில் திருவிழா.


உடுமலை தில்லைநகர் நெடுஞ்செழியன் காலனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் ஸ்ரீபட்டத்தரசி அம்மன் ஸ்ரீ பொம்மியம்மாள் வெள்ளை அம்மாள் கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது.


3 ம் தேதி துவங்கிய திருவிழாவில் முதல் நாள் திருமூர்த்தி மலை சென்று தீர்த்தம் எடுத்துவந்தும் தொடர்ந்து போடிபட்டியிலிருந்து தீர்த்தம் எடுத்து சக்தி கும்பம் அழைத்து வரப்பட்டது.
இரண்டாம் நாள் காலை 6 மணிக்கு மாவிளக்கு முளைப்பாரி சீர்வரிசை ருத்திரப்ப நகர் விநாயகர் கோவிலில் இருந்து அழைத்து வரப்பட்டது தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் அலங்கார அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் சுவாமி ஊர்வலம் மற்றும் பூவோடு எடுத்தல் எடுத்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.


நிறைவு நாளன்று மதியம் அபிஷேக பூஜை மஞ்சள் நீராட்டு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )