மாவட்ட செய்திகள்
திருச்சி மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு.

திருச்சி எவன்ஸ் கேரம் போர்டு சார்பில் 4நாள் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் இன்று காலை தொடங்கியது. இதில் திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணச்சநல்லூர், துறையூர், மணப்பாறை, லால்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். போட்டிகள் ஜூனியர், சப்-ஜூனியர் என் பிரிவின் கீழ் நடைபெறுகிறது. மேலும் சிங்கிள்ஸ், டபுள்ஸ் என இரண்டு பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறுகிறது.

மாநில அளவிலான நடுவர்கள் முன்னிலையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூபாய்3000ம், இரண்டாவது பரிசாக ரூபாய் 2000ம், வழங்கப்பட உள்ளது. இதேபோல் டபுள்ஸ். விளையாட்டில் வெற்றி பெறும் இணைகளுக்கும் முதல் பரிசாக ரூபாய் 3000ம், இரண்டாம் பரிசாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்பட உள்ளது.

மேலும் சப் ஜூனியர் பிரிவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 1500ம், இரண்டாவது பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை heaven’s கேரம்போர்டு கிளப்பில் தலைவர் பிரான்சிஸ் செய்திருந்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
