மாவட்ட செய்திகள்
காங்கேயநல்லூரில் 46ம் ஆண்டு கெங்கை அம்மன் கோயில் சித்திரை திருவிழா!
வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூரில் 46ம் ஆண்டு கெங்கை அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதில் சிரசு ஏற்றம் மற்றும் இதய உற்சவம் மற்றும் அதிநூதன புஷ்பப்பல்லக்கு கெங்கை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது .
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி.ரமேஷ், சுப்பிரமணி,கோகுல்ராஜ்,குமரன் காங்கேயநல்லூர் செங்குந்தர் மற்றும் புகழனார் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் காங்கேயநல்லூர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.