BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

முறையற்ற உறவால் காவல்துறை விசாரணைக்குப் பயந்து இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பென்னாகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை தவிக்க விட்டு கணவனின் நண்பனோடு சென்ற மனைவி: போலீஸ்  விசாரணைக்குப் பயந்து விபரீத முடிவு!

தருமபுரி மாவட்டம் கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது. தம்பதி இருவரும் திருப்பூரில் பணிபுரிந்தனர். அப்போது சதீஷின் நண்பர் சின்னப்பையனுக்கும், சங்கீதாவிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை சதீஷ் கண்டித்துள்ளார். ஆனால், இந்த உறவு தொடர்ந்துள்ளது.

இதனால் தனது மனைவியை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு சதீஷ் திரும்பியுள்ளார். ஆனால், கடந்த மாதம் 3-ம் தேதி தனது கைக்குழந்தையை விட்டு விட்டு சின்னப்பையனுடன் சங்கீதா தலைமறைவானார். இதுகுறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சதீஷ் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சின்னப்பையன் மற்றும் சங்கீதாவை செல்போனில் தொடர்பு கொண்ட போலீஸார், காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். இதன் பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சின்னப்பையன், சங்கீதா வந்தனர். அப்போது திடீரென அவர்கள் இருவரும் மயங்கி விழுந்தனர். இதனால் பதறிப்போன போலீஸார், அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், சின்னப்பையனும், சங்கீதாவும் விஷம் அருந்திவிட்டு காவல் நிலையத்திற்கு வந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பென்னாகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )