மாவட்ட செய்திகள்
திருச்சியில் வணிகர் விடியல் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதுபெரும் வணிகர்களுக்கு விருது வழங்கினார்.

திருச்சியில் இன்று நடந்த தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் முதுபெரும் வணிகர்களுக்கு விருது வழங்கி பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39வது வணிகர் தினத்ைதயொட்டி தமிழக வணிகர் விடியல் மாநாடு திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகில் இன்று (5ம்தேதி) காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார்.
பொது செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றார். பொருளாளர் சதக்கத்துல்லா மாநாட்டு தீர்மானங்களை வாசித்தார். அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய தலைவர் பார்டியா, தேசிய பொது செயலாளர் பிரவீண் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டை துவக்கி வைத்து பேசினர். இந்த மாநாட்டில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு திருச்சிக்கு (5ம்தேதி) பகல் 12.15 மணிக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் முதல்வர் காரில் சென்று மாநாட்டில் பங்கேற்றார்.
முதுபெரும் வணிகர்களுக்கு வஉசி வணிக செம்மல் விருதுகள் வழங்கியும், நலிந்த வணிகர்களின் வாரிசுகளுக்கு கல்வி ஊக்கத்ெதாகையும் வழங்கி பேசினார். இதைதொடர்ந்து அங்கிருந்து காரில் மன்னார்புரத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்ற முதல்வர், அங்கு மதிய உணவு அருந்தினார். பின்னர் 2.30 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னைக்கு தனி விமானத்தில் முதல்வர் புறப்பட்டு சென்றார். முதல்வர் வருகையொட்டி, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் எஸ்பி சுஜித்குமார் மேற்பார்வையில் 750க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
