மாவட்ட செய்திகள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா!

காட்பாடி கிளித்தான் பட்டறையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வேலூர் எம்.பி.,கதிர்ஆனந்த் அடிக்கல் நாட்டினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கிளித்தான் பட்டறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள் . இவ்விழாவில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா மற்றும் 5வது வட்ட திமுக பிரமுகர், தொழிலதிபருமான விநாயகம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
