மாவட்ட செய்திகள்
450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹலரத் செய்யதினா செய்யது இஸ்மாயில் சாதாத் வலியுல்லாஹ் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடி ஊர்வலம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹலரத் செய்யதினா செய்யது இஸ்மாயில் சாதாத் வலியுல்லாஹ் பள்ளிவாசல் கந்தூரி விழா ஜமாத் நிர்வாக சபை செயளாலர் முஜிப் ரஹ்மான், துனை செயளாலர் பாவாசா அகமது தலைமையில் நடைபெற்றது. பள்ளிவாசலின் பொருளாலர் ஜெக்கரியா, கந்தூரி கமிட்டி நிர்வாகிகள் ஹாஜாகமால், நாசர் மரைக்காயர், சலாவுதீன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், ஜமாத்தார்கள் முன்னிலை கொடி ஊர்வலம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை அடுத்து முக்கிய வீதிகளான பள்ளிவாசல் தெருவில் துவங்கி தட்டாரதெரு, நகுதாதெரு, ராணிவீதி, ராஜாவீதி வழியாக பள்ளிவாசல் வந்தடைந்து கொடியேற்றத்துடன் முடிவடைந்தது.

இதில் பேரூராட்ச்சி துனை தலைவர் பொன்.ராஜேந்திரன், தரங்கம்பாடி மீணவபஞ்சாயத்தார்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் என அனைத்தும் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

தேனிஸ் கோட்டைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரோட்டத்தை கண்டு ரசித்தனர். பொறையார் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
