BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

காரைக்கால் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவக்கம்.

பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 5-ஆம் தேதி துவங்கப்பட்டு 23-ஆம் தேதி வரை மொத்தம் 7 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு துணை மாவட்ட ஆட்சியர் எம்.ஆதர்ஷ் காரைக்காலில் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்தார். ஆய்வின்போது பள்ளி கல்வித்துறை துனை இயக்குனர் ராஜேஸ்வரி, காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், அரசு அலுவலர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர்களிடம் துணை மாவட்ட ஆட்சியர் கூறுகையில் இத்தேர்வில் காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம் 2210 பேர் தேர்வெழுதுகின்றனர். 10 அரசுப் பள்ளிகள் மற்றும் 15 தனியார் பள்ளிகளின் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். மேலும் இந்த ஆண்டு 190 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகிறார்கள். மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் ஐந்து மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுகிறார்கள். குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது என்று துணை மாவட்ட ஆட்சியர் கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )