மாவட்ட செய்திகள்
மடத்துக்குளம் வட்டாரப் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென லேசான கனமழை.
மடத்துக்குளம் வட்டாரப் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென லேசான கனமழை மடத்துக்குளம் குமரலிங்கம், பாப்பான்குளம், கணியூர், கடத்தூர், வேடப்பட்டி, மைவாடி போன்று சுற்றுவட்டார பகுதியில் பரவலாக பெய்துள்ளது.
பரவலாக பெய்ய துவங்கிய லேசான மழை காரணமாக, தற்போது கடத்தூர் மற்றும் கணியூர் பகுதியில் உள்ள அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் பரவலாகவே கனமழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தரையில் சாய்ந்து விழுந்துள்ளது.
இந்த நிலை தொடரும் விதமாக, தற்போது வானம் மேகமூட்டத்துடன் கன மழையை நோக்கி நகர்ந்து, அது கனமழையாக உருவெடுக்கும் பட்சத்தில், இப்பகுதியில் உள்ள அறுவடைக்கு தயாராகியுள்ள நெற்கதிர்களுக்கு, இந்த தீடிர் கன மழை வரும் வாய்ப்புள்ளது என பல்வேறு தரப்பினரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
CATEGORIES திருப்பூர்