மாவட்ட செய்திகள்
செங்கம் பகுதிக்கு ஆயிரகணக்கான கருப்பின நாரை கொக்குகள் உணவுக்காக படையெடுப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அரியவகை கருப்பு இன நாரை கொக்குகள் உணவுக்காக வயல்வெளிகளில் இறை எடுப்பதை செங்கம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.
அரியவகை கருப்பு இன கொக்குகள் மனித நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருவது இயல்பு தற்போது நாரைகளின் இனப்பெருக்கம் காலம் என்பதால் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏரி குளங்களில் உள்ள மரங்களில் அரிய வகையான கருப்பின நாரை கொக்கு தஞ்சம் அடைந்துள்ளது.
வயல்களில் வெள்ளை நிற கொக்குகளை பார்த்து வந்த பொதுமக்களுக்கு ஆயிரக்கணக்கான கருப்பு நிறக் நாரைகொக்குகளை கூட்டம் கூட்டமாக இருப்பதை கண்டு ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.