மாவட்ட செய்திகள்
ராம்ராஜ் நிறுவனத்தின் 212வது கிளையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் இன்று திறந்து வைத்தார்.
ராம்ராஜ் நிறுவனத்தின் 212வது கிளையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் இன்று திறந்து வைத்தார் – இதன் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு வாழ்வளித்து வருவதாக ராம்ராஜ் நிறுவனத் தலைவர் நாகராஜன் பேட்டி.
ராம்ராஜ் நிறுவனத்தின் 212 ஆவது கிளை இன்று திருப்பூர் மில்லர் பேருந்து நிறுத்தம் பகுதியில் திறக்கப்பட்டது இதனை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் திறந்து வைத்தார்.
இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தங்கள் தொழிலை விரிவுபடுத்திய ராம்ராஜ் நிறுவனத்தின் 212வது கிளை திறப்பு விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்த நிறுவனத்தின் உரிமையாளர் நாகராஜன் ராம்ராஜ் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெசவாளர்களுக்கு வாழ்வளித்து வருவதாகவும் நெசவாளர்களை மேம்படுத்த ராம்ராஜ் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருவதோடு வேட்டி சட்டைகள் மட்டுமல்லாது தற்போது சேலை ரகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.