மாவட்ட செய்திகள்
உடுமலையில் தொடர் திருட்டு; மக்கள் அச்சம்: ஒரே நாளில் இரு வீட்டில் 27 பவுன் நகை மாயம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை பகுதியில், கடந்த சில வாரமாக, பூட்டியிருக்கும் வீடுகள் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து, பணம், நகை திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.உடுமலை, எஸ்.வி., மில் அருகே, சின்மயானந்தா நகரைச்சேர்ந்த, ஓய்வு பெற்ற கல்லுாரி பேராசிரியர் கல்யாண சுந்தரம், 62, கடந்த, 30ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, மனைவியுடன், கோவையிலுள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு மற்றும் பின் கதவு தாழ்ப்பாழ்கள், பூட்டு உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே பெட்ரூமிலிருந்த, பீரோவை உடைத்து, அதிலிருந்த, 2 பவுன் தங்கச்செயின், 4 பவுன் ஆரம், 2 தங்க வளையல், 4 மோதிரம், 6 ஜோடி தங்கத்தோடு, தங்கக்காசுகள் என, 19 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.அதே போல, பெரியகோட்டை பிரிவு, மாரியப்ப கவுண்டர் லே- அவுட்டைச்சேர்ந்த, சவுந்தரராஜன், 52, இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.கடந்த, 3ம் தேதி, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரத்திற்கு, விசேஷத்திற்கு, குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்த போது, வீடடுக்கதவு மற்றும் அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, உள்ளிருந்த, தங்கச்செயின்,மோதிரம், கம்மல் என, 8 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது.இது குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உடுமலை பகுதிகளில், தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், திருட்டுக்கும்பலை விரைந்து பிடிக்கவும் வேண்டும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
