மாவட்ட செய்திகள்
தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

தமிழகத்தின் முதவராக ஆட்சிப் பொருப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுபெற்றதையடுத்து முதல்வர் இன்று பல்வேறு முக்கிய திட்டங்களின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது, மேலும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார், இந்நிலையில் தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்கள் நூறு ஆண்டு போற்றும் ஓராண்டு ஆட்சிக்கு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர் அதைத்தொடர்ந்து ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகர கழக செயலாளர் தலைமையில் பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு ஆண்டுகால சாதனையை போற்றும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இதில் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர், நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பொருப்பாளர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
