BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

காரைக்காலில் விதவை மற்றும் முதியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை.

பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த விதவைகள் மற்றும் முதியவர்கள் 50 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்து துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 50 பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான அடையாள அட்டையை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார். இதில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் சத்யா மற்றும் அரசு அலுவலர்கள், துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )