மாவட்ட செய்திகள்
பாண்டியன் மதகு கால்வாய் கட்டும் பணிக்கு பூமி பூஜை :எம். பி., பங்கேற்பு !

காட்பாடி வி.ஜி. ராவ் நகரில் ரூ.3.90 லட்சம் மதிப்பில் பாண்டியன் மதகு கால்வாய் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியை வேலூர் எம்.பி., கதிர்ஆனந்த் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், ,காட்பாடி அடுத்த வி.ஜி.ராவ் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 3.90 லட்சம் பாண்டியன் மதகு கால்வாய் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது .

இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார் .பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த
நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, மாநகர துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, வடக்கு பகுதி கழக செயலாளர் ஜி.வன்னியராஜா, ஒன்றிய குழு துணைத் தலைவர் சரவணன் ,மாமன்ற உறுப்பினர்கள் கல்புதூர் அன்பு, ரவிக்குமார் , சித்ரா, சுதாகர், அரசுத்துறை அதிகாரிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
