BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

சென்னையின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான்சாவடி வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.கரையான்சாவடியில் இருந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் செல்ல கனரக வாகனங்களான பஸ், லாரி , டிரக் செல்ல அனுமதி இல்லை. ஆனால் ஆம்புலன்ஸ், இலகு ரக வாகனம், இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி உண்டு.

போரூர், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி வழியாக பூந்தமல்லி பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ், தனியார் பஸ் கரையான்சாவடியில் இருந்து வலதுபுறம் திரும்பி ஆவடி சாலை வழியாக சென்று சென்னீர்குப்பம் மேம்பாலத்திற்கு முன்பு இடது புறம் திரும்பி பைபாஸ் சாலையில் சென்று பூந்தமல்லி மேம்பாலம் அம்பேத்கர் சிலை அருகே இடது புறம் திரும்பி பூந்தமல்லி பஸ் நிலையம் செல்லலாம்.

இதே போல போரூரிலிருந்து பூந்தமல்லி செல்லும் கனரக வாகனங்கள் குமணன்சாவடியில் இருந்து வலது புறம் திரும்பி சென்று, சவீதா பல் மருத்துவக்கல்லூரி எதிரே உள்ள மேம்பாலம் முன்பு இடது பக்கம் திரும்பி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.இதே போல கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், வேலப்பன் வழியாக பூந்தமல்லிக்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும் குமணன்சாவடி பக்கம் செல்லாமல், தொடர்ந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லிக்கு செல்லலாம்.

ஆனால் கோயம்பேட்டியிலிருந்து பூந்தமல்லி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் குமணன்சாவடி , கரையான்சாவடி, சென்னீர்குப்பம், பைபாஸ் வழியாக பூந்தமல்லி பேருந்து நிலையம் செல்லலாம்.இதே போல மாங்காட்டில் இருந்து பூந்தமல்லி நோக்கி செல்லும் அரசு பேருந்து, தனியார் பேருந்து குமணன்சாவடி, கரையான்சாவடி , சென்னீர்குப்பம், பைபாஸ் வழியாக பூந்தமல்லி செல்லலாம்.மாங்காட்டியில் இருந்து பூந்தமல்லி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் குமணன்சாவடி, சவீதா கல்லூரி, பைபாஸ் வழியாக செல்லலாம்.

ஆவடி, பருத்திப்பட்டு, காடுவெட்டி வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்கள், பேருந்துகள், சென்னீர்குப்பத்தில் வலது பக்கம் திரும்பி பைபாஸ்சாலை சென்று பூந்தமல்லி செல்லலாம்.நசரத்பேட்டை வழியாக பூந்தமல்லி பேருந்து நிலையம் செல்லும் அனைத்து பஸ்களும் வழக்கம் போல் செல்லலாம். இதில் மாற்றம் இல்லை.நசரத்பேட்டையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் வழக்கம் போல் பூந்தமல்லி நகருக்குள் செல்லாமல் , பைபாஸ் சாலையில் தொடர்ந்து செல்லலாம்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்துசென்னை, மாங்காடு, ஆவடி, போரூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் பாரிவாக்கம் பைபாஸ் சாலையில் வலது பக்கம் திரும்பி செல்ல வேண்டும்.இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை dcpavadi.traffic@gmail.com மற்றும் மெட்ரோ கட்டுமானப் பணி அதிகாரி மின் அஞ்சல் sundramoorthyb@kecrpg.com அம்பத்தூர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் கைபேசி எண் 8056217958 என்ற எண்ணிலும்,பூந்தமல்லி போக்குவரத்து ஆய்வாளர் கைபேசி எண் 9600009159 என்ற எண்ணிலும், ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறை கைபேசி எண் 7305715666 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அதிகாரப்பூர்வ டுவிட்டர் http://twitter.com/avadipolice என்ற டுவிட்டர் பக்கத்தில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு நேரடியாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )