BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உலகமகளிர் தினவிழாவை முன்னிட்டு மகளிர் தின விழா, விருதுகள் வழங்குதல், 3ம்ஆண்டு துவக்கவிழா.

உலகமகளிர் தினவிழாவை முன்னிட்டு மகளிர் தின விழா, விருதுகள் வழங்குதல், 3ம்ஆண்டு துவக்கவிழா.

புது வாழ்வு சமூக மேம்பாட்டு அறக்கட்டளை பெண்கள் சக்தி அறக்கட்டளை லியோ அறக்கட்டளை சிகரம் அறக்கட்டளை இணைந்து
உலகமகளிர் தினவிழா, முன்னிட்டு விருதுகள் வழங்குதல், 3ம்ஆண்டு துவக்கவிழா மற்றும் மகளிர் தின விழா
புது வாழ்வு சமூக மேம்பாட்டு அறக்கட்டளை
இயக்குனர் அழகுரோஜா தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாமன்ற உறுப்பினருமான மதிவாணன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து வழங்கினார். கண்மலை அறக்கட்டளை, சகாயஹெலன், தொழிலாளர் மற்றும் விவசாய ஆலோசகர் ஞானசேகரன், சோசியல் மிடியா அப்துல் ரஹீம், மாமன்ற உறுப்பினர்கள் தங்கலெட்சுமி, பன்னிர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக டி.இ.எல்.சி பள்ளி தலைமை ஆசிரியை சுகந்திடெய்சி ராணி,
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்,முனைவர் முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு
பெண்கள் தன்னம்பிக்கையுடன் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் பெண்களுக்கான உரிமையை அரசு வழங்கியுள்ளது அதை சரியான வழியில் பயன்படுத்திட வேண்டும் பெண்கள் என்பவர்கள் அடிமை அல்ல அனைவரும் சமமானவர்களேபெண்கள் அவர்களுக்கான உரிமையை நல்வழியில் பயன்படுத்திட வேண்டும் மகளிர் தினத்தில் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும் என உரை நிகழ்த்தினர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )