மாவட்ட செய்திகள்
காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம்.
தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஜவுளிகடை நிறுவனத்தின் உரிமையாளர் முருகன் என்பவர் தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிக்கும் நோக்கில் இருப்பதாக கூறியும், பாதிக்கப்பட்ட பெண்ணை மக்கள் மத்தியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று கூறியும் தேனி பழைய நிலையம் அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, சீர்மரபினர் நல சங்கம் மற்றும் தமிழ்மாநில பிரமலைக்கள்ளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மகளிர் அணி அகில இந்திய துணைத் தலைவர் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி மாயாண்டி சீர்மரபினர் சங்கம் சார்பாக ராமமூர்த்தி, விஜயலட்சுமி உட்பட 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.