BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் கணவர் இறந்த அதே நாளில் மனைவியும் காத்திருந்து தற்கொலை.

Employee suicide || செல்போன் செயலியில் கடன் வழங்கும்- ஏஜெண்டுகள் தொல்லையால்  தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் கணவர் இறந்த அதே நாளில் மனைவியும் காத்திருந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் பலர் உயிர் இழந்தனர். அதன்பின்னரே தடுப்பூசி 45 வயது முதல் 60 வயது வரையில் இருக்கும் மக்களுக்கும் பரவலாகக் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றினால் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் ஆண்களை இழந்த பலரும் இன்னும் நிர்கதியாய் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோட்டில் மோசமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கொமரபாளையும் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சாந்தி(45) இந்தத் தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பழனிச்சாமி, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி உயிர் இழந்தார். கணவரின் திடீர் உயிரிழப்பைத் தாக்கிக்கொள்ள முடியாத சாந்தி தன் கணவரின் நினைப்பிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் சாந்தி தன் கணவர் இறந்த அதேநாள், அதே நேரத்தில் விஷமருந்தி நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். இது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )