BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை நகர பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இரண்டு பாலங்கள் பணிகள் தண்ணீர் திறப்பதற்குள் முடிக்கப்படும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி.

தஞ்சாவூர் கரந்தை வடவாறு மற்றும் கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே செல்லும் தற்போதுள்ள பழைய பாலங்களுக்கு மாற்றாக புதிய உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.


இந்த பணிகளை ஆய்வு செய்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். பணிகள் எந்த அளவு நடந்து முடிந்துள்ளது போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தஞ்சையில் கரந்தை வடவாறு, இர்வின் பாலம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.

இந்த பால பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பில் 34 பணிகள் நடந்து வருகிறது. மேலும் 14 தரைமட்ட பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றும் பணி நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் தரமாக நடந்து வருகிறது.


ஜூன் 1-ந் தேதிக்குள் தஞ்சையில் நடந்துவரும் பாலப் பணிகள் முடிவடையும். ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கபட்டால் அதற்கு முன்னதாகவே பணிகள் முடிவடைந்து விடும் எனவும் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )