மாவட்ட செய்திகள்
மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்: 5 பேருக்கு வலை!

காட்பாடியில் தான் வேலை பார்க்கும் கடையின் முன் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட வரை நையப்புடைத்த 5 இளைஞர்கள் கொண்ட
போதைக் கும்பலுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வரும் இளைஞர் காட்பாடி அடுத்த ஒட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் . நேற்றுமுன்தினம் தான் வேலை பார்க்கும் கடைக்கு வந்து உள்ளார் . அப்போது தான் வேலை பார்க்கும் கடையின் முன் 5 இளைஞர்கள் மது அருந்திக்கொண்டு இருந்தனர் . இது குறித்து தட்டிக்கேட்ட கோவிந்தனை இளைஞர்கள் 5 பேரும் சேர்ந்து சராமரியாக தாக்கி உள்ளனர்.

இதனை கண்ட சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட கோவிந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தப்பிய ஓடிய போதை ஆசாமிகளை வீடியோவைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை சாட்டையை சுழற்றுவது நிறுத்திவிட்டால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதை ஆகிவிடும் என்பதற்க்கு இந்த சமபவமே உதாரணம்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
