BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே பரமக்குடியில் டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர்.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடியில் சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டிராக்டர் ஒன்று தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தது. அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி சென்ற கொண்டிருந்த அரசு பஸ் சாலையின் நடுவே தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த டிராக்டரின் பின்பக்கம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துகுள்ளானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. அரசு பஸ் ஓட்டுநர் மோகன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் காயம் அடைந்தனர். இதேபோல் டிராக்டர் டிரைவர் மூர்த்தி என்பவரும் லேசான காயமடைந்தார்.

தகவலறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ‘

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )