மாவட்ட செய்திகள்
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் முப்பதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வட்டாட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு பழைய ஓய்வூதியம் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில் சத்துணவு சங்க மாவட்ட தலைவர் வில்வநாதன் மற்றும் புவனேஸ்வரி சேகர் தீனதயாளன் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
