மாவட்ட செய்திகள்
வேலூர் மேல்பாடி காவல் நிலையத்தாரின் துன்புறுத்தலால், தன்னைத்தானே தீயிட்டு மாய்த்துக் கொண்ட தம்பி சரத்குமாரின் மரணத்திற்க்கு நீதி கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னனியால் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூர் மாவட்டம் மேல்பாடி காவல் நிலையத்தாரின் துன்புறுத்தலால், தன்னைத்தானே தீயிட்டு மாய்த்துக் கொண்ட குகைய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பி சரத்குமாரின் மரணத்திற்க்கு நீதி கேட்டு 09.05.2022 அன்று மாலை 4.00 மணிக்கு காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னனியால் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாலர் வழக்கறிஞர் சி. சஜின் குமார், மாவட்ட துணை செயலாளர் திரு. அ.இளங்கோ, மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு. க. அ நாகராஜ், காட்பாடி தொகுதி து. செயலாளர் திரு. ச.ஜீவா, வேலூர் மாநரகரத்தின் ஒன்றாம் பகுதி செயலாளர் திரு. இன்பராஜ், இரண்டாம் பகுதி செயலாளர், திரு. ரீகன், காட்பாடி ஒன்றிய துணை செயலாளர்கள் சந்தோஷ்குமார், வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
