மாவட்ட செய்திகள்
செங்கம் மறறும் சுற்றுவட்டார பகுதி களில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து சேதம் மின் விநியோகம் துண்டிப்பு- பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் தவிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் பகுதிகளில் இரவு இதுவரை காணத வகையில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் பொதுமக்கள் நடுக்கம்.


கூரை வீடுகள் மற்றும் தட்டை வீடுகள் – சீட்டால் அமைக்கப்பட்ட மாட்டுக் கொட்டகைகள் மற்றும் மேல் தளங்களில் அமைக்கப்பட்ட ஷீட் சாலையோரங்களில் உள்ள மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது.


அதிர்ஷ்டவசமாக இந்த பலத்த காற்றால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
மேலும் தற்போது பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.


இந்த சூறாவளி காற்றால் வீடுகளை இழந்து தவித்து வருபவர்களுக்கு நிவானம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
